கருவளையம் எளிதில் மறைய மூலிகை குறிப்புகள்

முகத்திற்கு அழகினைத் தருவது கண்கள் தான், ஆனால் அதிக வேலைச் சுமையினாலும் போதுமான தூக்கம் கிடைக்காததாலும் அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவற்றால் கருவளையம் உண்டாகிறது.
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்றவையும் காரணமாக அமைகிறது.
இவ்வாறு கருவளையங்கள் வருவதால் முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றம் உருவாகும்.
வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே எவ்வாறு கருவளைத்தை போக்கலாம் என்று பார்ப்போம்.
ஆரஞ்சு சாறு
ஆரஞ்சுப்பழத்தில் விட்டமின் சி உள்ளது. இது கண்களின் கருவளையைத்தினை போக்குவதற்கு சிறந்தவொரு முறையாகும்.
ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவ வேண்டும், பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள், மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் பறந்துவிடும்.
பூசணிக்காய்
பூசணிக்காயில் மருத்துவ குணநலங்கள் காணப்படுவதால் இதுவும் கருவளையத்திற்கு சிறந்த தீர்வாகும்.
முதலில் பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கு கண்மேல் வைத்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும், இவ்வாறு வாரம் 2 முறை செய்தால் மெல்ல மெல்ல கருவளையம் மறையும்.
அகத்திக் கீரை
கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது.
தக்காளி வெள்ளரி கலவை
ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள், இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.
ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்றும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
தாமரைப் பூ
தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்து அதில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெயும், 1 ஸ்பூன் தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும்.
பிறகு குளிர் சாதனப் பொட்டியில் வைத்துக் கொண்டு, வாரம் 2 முறை கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும். வாரம் 3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சாமந்திப் பூ
2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை எடுத்துக் கொள்ளவும். பிறகு 1 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, மூடி வைக்க வேண்டும்.
பின்னர் 24 மணி நேரம் அப்படியே ஊறவிட்டு பின்பு அந்தத் தண்ணீரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தனால் கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறையலாம்.

No comments

Powered by Blogger.