மூன்று இந்திய மீனவர்கள் கைது

நேற்று இலங்கை கடலில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் மூவர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளனர் நெடுந்தீவு வட மேற்கு கடலிலிருந்து 10 மைல்கள் தூரத்தில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்களையே இவ்வாறு கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் கைது செய்தவர்களை இலங்கை கடற்படை “உத்ர” நிறுவனத்திடம் ஒப்படைத்ததோடு கைப்பற்றப்பட்ட மீன் பிடி படகுகள் மற்றும் பொருட்களை காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் “எலார” நிறுவனத்திடமும் ஒப்படைத்துள்ளனர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் யாழ் கடற்றொழில் உதவிப்பணிப்பாளரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.