iPhone 8 கைப்பேசியினை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 8 கைப்பேசிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இக் கைப்பேசிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவிருந்தது.

அண்மையில் செப்டெம்பர் 6 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் எனவும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் தற்போது அதிர்ச்சி தரும் வகையில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அல்லது நொவெம்பர் மாதமே இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகின்றது.

குறித்த கைப்பேசிகளில் சில தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் இடம்பெறவுள்ளதாலேயே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

L வடிவமைப்பிலானதும் நீடித்த பாவனைகொண்டதுமான மின்கலமும் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.