கொழும்பு கோட்டையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது


கொழும்பு – கோட்டை, செதம் வீதி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த கட்டடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.