அழுகிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு!

கம்பளை பிரதேசத்தின் பாடசாலை கட்டிடமொன்றில் இருந்து நபரொருவரின் சடலமொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவரொருவர் விடுத்த தகவலுக்கு அமைய இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

பாடசாலையில் கைவிடப்பட்டிருந்த கட்டிடமொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குறித்த சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் அடையாளம் காண முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.