யாழ்-பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மூடப்படுவதாக வந்த தகவல் பொய்யென அறிவிப்பு!!

டெங்கு நோய் தொடர்பில் இதுவரை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

டெங்கு நொய்த் தொற்று காரணமாக பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பல்கலைக்கழத்தின் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து, வைத்தியரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

டெங்கு நோயினால் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர்,

விஜயரட்ணம் விந்துசன் என்ற இளைஞன் இருதய அழற்சி நோயால் உயிரிழந்துள்ளதாகவும், இருப்பினும் அவரது இறப்புத் தொடர்பான மேலதிக பரிசோதனைக்காக அரவரது உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயிரத்து 39 பேர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்,

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆயிரத்து 309 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும்,

கடந்த 2016 ஆம் ஆண்டு 670 பேர் டெங்கு நோய்த்தொற்றால் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இவ்வாண்டு ஆரம்பம் முதல் கடந்த 21 ஆம் திகதி வரை 1702 பேர் டெங்கு நோய்த்தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.