மாகாண எல்லை நிர்ணயத்துக்கான பணிகள் ஆரம்பம்!

மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த குழுவின் தலைவர் கே.தவலிங்கம தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய குழுவின் செயற்படுகள் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், `எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

எல்லை நிர்ணயத்திற்காக குழுவுக்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது மாகாணங்களினதும் எல்லை நிர்ணயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தற்சமயம் கலைக்கப்பட்டுள்ள வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகள் பற்றி இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவிருக்கிறது.

ஊரிய மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை அடங்கிய தகவல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எல்லை நிர்ணயத்தின் போது பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவிருக்கின்றன. இது தொடர்பான அறிவித்தல் வார இறுதி நாட்களில் வெளியாகும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படவுள்ளது`என கே.தவலிங்கம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.