புரட்சிக்காக சேற்றில் இறங்கினார் ஜனாதிபதி

கெக்கிராவை - திப்பட்டுவௌ நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி புரட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு விவசாயியாக மாறியுள்ளார்.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி புரட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்ட ஜனாதிபதி சில கருத்துக்களையும் பதிவேற்றியுள்ளார்.

“நாம் ஒன்றாக சேர்ந்து விவசாயத்தை புதுப்பிக்க வேண்டும்..” என தெரிவித்து தாம் சேற்றில் இறங்கி இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படத்தையும் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 
 

No comments

Powered by Blogger.