ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா பிரதேச செயலாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த விழா நேற்று மாலை மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, முல்லையூர் பார்த்தீபன் எழுதிய பண்பாட்டு பெருவிழா இறுவெட்டு பிரதேச செயலாளரால், மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டுசுட்டான் பிரதேச கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு பண்டாரவன்னியன் நினைவு விருது வழங்கி வைக்கப்பட்டன.

இதில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டிருந்த நிலையில், களனிப்பல்கலைக்கழக உளநல ஆலோசகர் பேராசிரியர் எஸ்.ஜே.யோகராசா, யாழ். பல்கலைக்கழக புவியியல் விரிவுரையாளர் செ.ரவீந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


No comments

Powered by Blogger.