கோத்தபாய ராஜபக்ஷ கைது?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அடுத்து வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை கைது செய்யப்படாத பிரபல ராஜபக்சர் ஒருவர் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக குறித்த ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீண்ட காலமாக அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவர் கைது செய்யப்படவுள்ளதாக பாதுகாப்பு தரப்பினை மேற்கோள் காட்டி குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை மற்றும் அரசாங்க சொத்துக்களை தவறாக கையாண்டமை தொடர்பில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள அந்த பிரபலம், எதிர்வரும் வாரம் மீண்டும் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்களில் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை இந்த சந்தர்ப்பத்தில் செயற்படுத்தப்படவில்லை என்பதுடன், அவருக்கு முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்து உள்ளது.

அதற்கமைய கைது செய்யப்படவுள்ள பிரபலம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.