அம்பாறையில் யானை தாக்கி வயோதிபர் பலி!

அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள பெரிய சாளம்பைக்கேனி வட்டை பகுதியில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த வயோதிபர் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் யானைத் தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

No comments

Powered by Blogger.