காலியில் உலக ஆசிரியர் தின நிகழ்வு

உலக ஆசிரிய தினத்தினை சிறப்பிக்கும் முகமாக காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11 மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு அதிபர் இரா. சிறிகிருஸ்ணன் மற்றும் ஆசிரியை யோ.சுதாங்கனி ஆகியோர்களின் தலைமையில் 2017.10.06 ஆம் திகதி பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களது கலைநிகழ்வுகள், ஆசிரியர்களின் கவிதை, பாடல் மற்றும் ஆடல்கள் என்பன நிறைந்து நிகழ்வினை சிறப்பித்தது. இதன்போது க.பொ.த சாதாரண தர மாணவர்களால் ஆசிரியர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாடசாலையின் பிரதி அதிபர் வி.ஜீவராசா ஆசிரியர் தினம் தொடர்பாக சிறப்புரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

No comments

Powered by Blogger.