இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விடயங்கள் தொடர்பான உதவிச் செயலர் தோமஸ் ஏ செனன் நாளைய தினம் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்று வரும் இருதரப்பு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அமெரிக்க குழுவுக்கு இவர் தலைமை தாங்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விஷேட கலந்துரையாடல்களிலும் அவர் ஈடுபடவுள்ளார்.

அதே போன்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் நாளைய தினம் மாலை 7.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் கூட்டு ஊடக சந்திப்பிலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலரின் இலங்கை விஜயத்தின் போது அரச மற்றும் எதிர் கட்சியுடனான சந்திப்புகளின் போது ஜெனீவா தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுப்பட உள்ளது.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தேச புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து முக்கிய விடயங்களை கேட்டறியவுள்ளார். உள் நாட்டில் பல தரப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்ட நகர்வு குறித்து அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் அரச தரப்பினரிடம் கேட்டறிவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.