மட்டக்களப்பு 8 உள்ளூராட்சி சபைக்கான மனுத் தாக்கலில் இரண்டு வேட்பு மனுக்களே நிராகரிப்பு!!

                                                                                                                                                                                                                                                           க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கோரலில் 81 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் இன்று(21.12.2017) பிற்பகல் 2.20 மணியளவில் மாவட்ட செயலகத்தில் வைத்து தெரிவித்தார்.

இவ் 8 சபைகளுக்குமென 84 கட்டுப்பணங்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் 81 வேட்பு மனுக்களே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபைக்கு 12 கட்சிகளும்,5 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது.இவற்றில் அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டது. காத்தான்குடி நகர சபைக்கான 8 கட்சிகளும்,3 சுயேச்சை களும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும்,1 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கள் செய்யப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோரளைப்பற்று வடக்குக்கான பிரதேச சபைக்கு 9 கட்சிகளும்,2 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தது.தேசியமக்கள் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 10 ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு 5 கட்சிகளும்,1 சுயேச்சையும் வேட்புமனுத்தாக்கல் செய்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு 7கட்சிகளும்,2 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு 7கட்சிகளும்,ஒரு சுயேச்சைக்குழுக்களுமாக 8ம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. போரதீவு பற்று பிரதேச சபைக்கு 7கட்சிகளும்,2 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றைய தினம் பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன. 

இதன்படி 1.30 மணிவரையான ஆட்சேபணை தெரிவிக்கும் காலத்தினைத் தொடர்ந்து கட்சி களுக்கான கூட்டம நடைபெற்று அறிவிப்புக்கள் வழங்கப்பட்டன. 

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் நீதியானதும்,சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் மேற்கொள்ளும்.

No comments

Powered by Blogger.