பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்தது சக ஆய்வாளரின் துப்பாக்கிக் குண்டு..! ராஜஸ்தான் காவல்துறை விளக்கம்

மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி, ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ், `பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகருடையது' என்று தெரிவித்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. 


கொளத்தூரில் கடந்த நவம்பர் 16-ம் தேதி நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இந்த குற்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என்பதை அறிந்த கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தானுக்கு கடந்த 8-ம் தேதி சென்று கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கொள்ளையர்களால் துப்பாக்கியால் சுட்டதில், மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார் என்ற தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் போலீஸ் பார்க்கவ் தெரிவித்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.