ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் அறிவிப்பு

2017 ஆம் ஆண்டின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு - 171, மாவனெல்ல பதுரியா மத்திய மகா வித்தியாலயத்துக்கு – 169, மாவனெல்ல சாஹிரா கல்லூரிக்கு – 159, கொழும்பு - 12 விவேகானந்தா கல்லூரிக்கு – 165, மல்வனை அல் முபாறக் கல்லூரிக்கு - 164, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு – 158 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கொட்டகல கேம்பிரிட்ஜ் கல்லூரி மற்றும் கெகுனாகல தேசிய பாடசாலை ஆகிவற்றுக்கு –160, மூதூர் மத்திய கல்லூரிக்கு -158, கல்முனை காமெல் பாத்திமா கல்லூரிக்கு – 168, ஹப்புகஸ்தலாவ அல்மினாஜ் தேசிய பாடசாலைக்கு – 156 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிறுப்பு மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு – 156, விஸ்வமடு மகா வித்தியாலயம் மற்றும் அக்கறைப்பற்று ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்து கல்லூரி என்பனவற்றுக்கு – 155 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

வாழைச்சேனை அன்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி மற்றும் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரிக்கு 154 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு ரோயல் கல்லூரிக்கு - 182, கொழும்பு சேனாநாயக்க வித்தியாலயத்துக்கு - 173, கண்டி சில்வெஸ்டர் கல்லூரிக்கு – 176 என வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு-05 இஸிபத்தான கல்லூரிக்கு -171, பருத்தித்துறை ஹாற்லி கல்லூரிக்கு – 170, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு – 159, மட்டக்களப்பு மைக்கல்ஸ் கல்லூரிக்கு -164, சாய்ந்தமருது சாஹிரா கல்லூரிக்கு – 160, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு – 155 என வெட்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரக்கு – 157, ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு – 156, காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு – 155, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்துக்கு –154, கண்டி மகளிர் கல்லூரிக்கு -183 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

கண்டி விஹாரமகாதேவி மகளிர் வித்தியாலயத்துக்கு – 176, கொழும்பு – 04 முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு – 174, கண்டி அந்தனிஸ் மகளிர் கல்லூரிக்கு - 170, திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு - 169 என வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பருத்தித்துறை மெத்தடிஸ்ட் மகளிர் உயர் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலை ஆகியவற்றுக்கு – 165, ஹட்டன் கேப்ரியல் மகளிர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி என்பனவற்றுக்கு – 161 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சிசிலியா மகளிர் கல்லூரிக்கு – 160, கண்டி பதியூதீன் மகளிர் வித்தியாலயத்துக்கு - 159, கல்முனை மஹ்முட் மகளிர் கல்லூரிக்கு – 159, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு – 158, மாத்தளை அமீனா மகளிர் வித்தியாலயத்துக்கு – 156 என பரீட்சைகள் திணைக்களத்தால் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.