ஒரு வார காலத்தில் ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம்

ஹம்பாந்தொட்டை – மாகம்புர துறைமுக சேவையாளர்களுக்கு ஒரு வார காலத்தில் ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் மாகம்புர துறைமுக சேவையாளர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

தங்களை துறைமுக அதிகார சபையின் கீழ் உள்வாங்க வேண்டும் அல்லது 5 மில்லியன் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியவசதுடன் நடாத்திய சந்திப்பின் போதே ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கான உறுதி மொழியளிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஆர்ப்பாட்டம் நிறைவுறுத்தப்பட்டதாக மாகம் ருகுணுபுர துறைமுக சங்கத்தின் தலைவர் ரொமேஷ் ச்சமிது தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.