ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது

மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியூதினின் இணைப்புச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளிலும் மன்னார் நகர சபையிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தையே செலுத்தியுள்ளது.

இதேவேளை மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தலுக்காக சுயேட்சை குழு ஒன்று இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

நுவரெலியா, நோர்வுட், மஸ்கெலியா, ஆகரபத்தனை, கொட்டகலை அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகளுக்கும், ஹட்டன் டிக்ஓயா நகர சபைகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று கட்டுப்பணம் செலுத்தியது.

அதேநேரம், அம்பகமுவ பிரதேசசபையில் மாத்திரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தனித்தனியே போட்டியிடுகின்றன.

இதற்கிடையில், கிளிநொச்சியில் இன்று முதலாவது வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக சுயேட்சை குழு இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.

No comments

Powered by Blogger.