கிளிநொச்சியில் இடம்பெற்ற பயங்கர மோட்டார் சைக்கிள் விபத்து; இரண்டு பேர் பலி!!

கிளிநொச்சி ஏ.9 ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். 

கிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இதில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்றிரவு (18) 7.00 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானது. 

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய சிங்கராசா செந்தில்நாதன் என்பவரும் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த கரவெட்டியைச்சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை இவ்விரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.