கும்புறுமூலை பிரதேசத்தில் உருக்குலைந்த சடலம் கண்டெடுப்பு!!

மட்டக்களப்பு கும்புறுமூலை வெம்பு காட்டுப் பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (21) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக கல்குடாப் பொலிஸார் தெரிவித்தனர். 

கும்புறுமூலை வெம்பு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். 

45 – 50 வயதுக்குட்பவட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை. 

இச்சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கும்புறுமூலை பிரதேசத்தில் உருக்குலைந்த சடலம் கண்டெடுப்பு

No comments

Powered by Blogger.