அரச வங்கி ஆள்சேர்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு

“மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச வங்கியான பிராந்திய அபிவிருத்தி வங்கிக் கிளைகளிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 13 பேர், அண்மையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் ஒருவரே தமிழராவர். மற்றையவர்கள் அனைவருமே பெரும்பான்மையினர். ஆள்சேர்ப்பில் நிதியமைச்சு பாரிய பிழையைச் செய்துள்ளது” என, இப்பகுதி இளைஞர், யுவதிகள், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசனை, அவரது அலுவலகத்தில் சந்தித்து நேற்று (17) முறையிட்டனர்

அதுமட்டுமின்றி, இந்நியமனங்கள் யாவும் தேர்தல் பிரகடனப்படுத்துவதற்கு முன்பதாக திடுதிப்பென்று நடந்துள்ளதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“தெரிவு செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிராந்திய வங்கிக் கிளைகளில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களில் ஒருவரே களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த தமிழராவர். மற்றயவர்கள் அனைவருமே கம்பஹா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினர்.

No comments

Powered by Blogger.