பாதாள உலகக்குழுத் தலைவரின் மகன் தேர்தலில் போட்டி!


பிரபல பாதாள உலகக்குழு ஒன்றின் தலைவரது மகனும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வார இறுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் பிரதானமாக இயங்கி வரும் எட்டு பாதாள உலகக்குழுக்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

பிரதான அரசியல் கட்சிகளின் ஊடாக இவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் நோக்கில், பாதாள உலகக்குழுத் தலைவரின் மகன் வெளிநாடொன்றிலிருந்து நாடு திரும்பியுள்ளார். பிரதான கட்சியொன்றின் சார்பில் அவர் கொழும்பில் போட்டியிடவுள்ளார்.

கிம்புலாஎலே குணாவின் சகோதரர் ஒருவரது புதல்வர் புளுமென்டல் தொகுதியில் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

தெற்கின் முக்கிய பாதாள உலகக்குழுத் தலைவர்களில் ஒருவரான கொஸ்கொட சுஜியின் சகோதரியும், சுஜிக்கு எதிரான கொஸ்கொட தாரக்கவின் தாயும், மாகந்துரே மாதுஸின் பிரதான உதவியாளர் ஒருவரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கொலன்னாவ, மினுவன்கொட, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் இயங்கி வரும் பாதாள உலகக்குழுக்களின் உறுப்பினர்களும் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இம்முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும் விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரியொருவர் குறித்த வார இறுதி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.