கிறிஸ்மஸ் தினம் மக்களுக்கு நல்வழிகாட்டியாகும்: ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து

கிறிஸ்மஸ் தினம் மக்களுக்கு நல்வழிகாட்டியாகும்: ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து



மனிதநேயத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் சகல ஆயுதங்களையும் மௌனிக்கச் செய்து, அமைதியின் பாதையில் எதிர்காலத்தைப் பிரகாசமடையச் செய்ய கிறிஸ்மஸ் நல்வழிகாட்டியாக அமையும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”மனிதநேயத்தை முன்னிலைப்படுத்திய உலக பண்டிகையான நத்தார் கொண்டாட்டங்களுடன் இணைந்து அதனைக் கொண்டாடும் நம் நாட்டின் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எனது கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

தெய்வீகத்தன்மையும் மனிதாபிமானமும் சந்தித்துக்கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வாக அன்று முதல் இன்று வரை கிறிஸ்மஸ் பண்டிகை மானிட வரலாற்றில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது.

விவேகமும் சமத்துவமும் அற்ற குரூரத்தனம் வேரூண்றியிருந்த காலப் பகுதியிலேயே இயேசு பிரான் பூமியில் அவதரித்தார்.

அவர் தெய்வீக வரம் பெற்றவராக இந்த பூமியில் பிறந்திருந்தபோதிலும் சமூகத்தின் தீமையினை நீக்குவதற்கான வழிகாட்டுதலை ஒரு சாதாரண மனிதர் தமது வாழ்வில் எதிர்நோக்க நேரிடும்.

அனைத்து இடையூறுகளையும் அனுபவித்தவாறே அவர் உலக மக்களுக்கு தமத அனுபவங்களை வழங்கினார். இதனாலேயே மனிதாபிமானத்தின் ஆழத்தையும் அதில் இருக்கவேண்டிய முன்மாதிரியான குணங்களையும் உலக மக்கள் சரியாக இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது.

தற்கால உலக மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பாரிய சவால்களுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான வழிமுறையும் அதனுள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.