மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒளிவிழா!!

                                                                                                  - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளிவிழா நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (15) பகல் மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

ஒளி விழா நிகழ்வில் அருளுரை அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் , மெதடிஸ்த திருச்சபையின் பயிற்சி நிலையத்தின் தலைவர் சுகிர்தன் சிவநாயகம் ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்க உதயகுமார், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்தமாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, கணக்காளர் கே.பிரேம்குமார், உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், நடன நிகழ்வுகள் அதிதிகளின் உரை, கரோல் கீதங்கள், யேசு பாலனின் பிறப்பை நினைவூட்டும் நிகழ்வுகளும், நத்தார் பாப்பாவின் நடனம் மற்றும் பரிசு வழங்கலும் நடைபெற்றது.No comments

Powered by Blogger.