உலகின் மிக விலை உயர்ந்த வீட்டின் உரிமையாளர் யார் தெரியுமா? வெளியான தகவல்


ஊழலுக்கு எதிராக போராடுபவராக தன்னை காட்டிக்கொள்ளும் சவுதி இளவரசர் தான் உலகின் விலை உயர்ந்த வீட்டின் உரிமையாளர் என செய்தி வெளியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்சின் Louveciennes மாகாணத்தில் மன்னன் 14-ம் லூயி கட்டிய வெசலர்ஸ் அரண்மனை உள்ளது, இதன் அருகே பழங்கால கட்டிடங்கள் இருந்த இடத்தை கட்டுமான நிறுவனமான எமாட் கசோக்கி விலைக்கு வாங்கியது.
பின்னர் அங்கிருந்த கட்டிடங்களை இடித்துவிட்டு 17ம் நூற்றாண்டு அரண்மனை தோற்றத்தில் புதிய பங்களா வீட்டை கட்டியது.
2008-ம் ஆண்டு கட்டுமானம் தொடங்கி 2011-ம் ஆண்டு முடிவடைந்தது. இதற்கு ‘சாட்டியூ லூயிஸ் 14’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வீடு 57 ஏக்கர் பரப்பளவுள்ள பிரமாண்ட வளாகத்தில் அமைந்துள்ளது. வீடு மட்டும் 75 ஆயிரத்து 350 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் ஐபோன் மூலம் இயக்கும் வசதியுடன் கூடிய நீரூற்றுகள், விளக்குகள், 10 படுக்கை அறைகள், திரையரங்கம் உள்ளிட்ட சகல வசதிகளும் நிறைந்த அந்த வீட்டில் நீருக்கடியில் தியான-அறை இருப்பது கூடுதல் சிறப்பு.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த வீட்டை 2015-ஆம் ஆண்டு €275 மில்லியன் யூரோக்களுக்கு மர்மமான முறையில் விற்பனை செய்யப்பட்டது.
அதை வாங்கியது யார் என தெரியாத நிலையில், சவுதி அரசின் இளவரசரான 32-வயது முகமது பின் சல்மான் தான் வீட்டின் உரிமையாளார் என தற்போது தெரியவந்துள்ளது.
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக உறவினர்கள், அமைச்சர்கள், வணிக முதலாளிகள் உள்ளிட்ட யாரக இருந்தாலும் அவர்களை வீட்டுக் காவலில் வைத்ததன் மூலம் ஊழலுக்கு எதிரானவராக அறியப்பட்ட முகமது, இவ்வாறு பல மில்லியன் யூரோக்களை சம்பாதித்தது எவ்வாறு என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது போல் பல மில்லியன் டொலர்கள் சொத்து சேர்த்துள்ள இளவரசர், இனி ஊழலுக்கு எதிராக பயணிப்பது கடினம்தான் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சவுதி இளவரசரின் இந்த செயல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.