தபால் சேவைகள் ஸ்தம்பிக்கும் சாத்தியம்“தபால் திணைக்களத்தை அவசியம் கருதி, கூட்டுத் திணைக்களமாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என, இலங்கை தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும்,“சுகாதாரம், கல்வி மற்றும் ரயில் ஆகிய சேவைகள் ஒன்றிணைக்கப்பட்ட திணைக்களத்தின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தபால் சேவைக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் தபால் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார். 

தபால் திணைக்களத்தை கூட்டுத் திணைக்களமாக மாற்றி, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறு, இதற்குப் பொறுப்பான அமைச்சரை அறிவுறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.