25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் அஞ்சல் மூலம் வாக்களிப்பு



உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்களின் பெயர் பட்டியல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை அஞ்சல் மூல வாக்களிப்புக்காக 5 லட்சத்து 60 ஆயிரத்து 536 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், தேர்தல் காரியாலயம், மாவட்ட செயலாளர் காரியாலயம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி அஞ்சல் மூலமான வாக்களிப்புக்களை மேற்கொள்ள முடியும் எனவும்,

ஏனைய அரச சேவையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.