இலங்கை முழுவதும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் 100 நடமாடும் வாகனசேவை!!

பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் வழங்குவதற்காக நடமாடும் வாகனசேவை நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் 100 நடமாடும் வாகன சேவை நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூட்டுறவு மொத்த வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் றிஸ்வான் ஹமீட் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 700 வாராந்த சந்தைகளை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டம் சிவில் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.