மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் செய்தியாளர்கள்


சம்பிரதாயபூர்வமான ஊடகவியலாளன் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதால், ஸ்மார்ட் தொலைபேசிகளை வைத்திருப்பவர்கள் அனைவரும் தற்போது செய்தியாளர்களாக மாறியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தணிக்கை அல்லது சட்டத்தின் மூலம் ஊடகத்தை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை பத்திரிகை சபை மாத்தறை மாவட்ட பாடசாலை ஆசிரியர்களுக்காக ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கில் இன்று உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொழில்களில் நம்பிக்கை தன்மை குறித்து கருத்தாய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு பட்டியலில் ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளுமே இறுதியில் இருந்தனர்.

அப்படியானால், அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் ஒரே படகில். அரசியல்வாதிகளுக்கு ஏன் அப்படி நேர்ந்தது என்ற விடயத்தை நான் கூறபோவதில்லை.

சம்பிரதாயபூர்வமான ஊடகவியலாளர்கள் மீதான நம்பகதன்மை மக்களிடம் குறைந்து வருகிறது. அடிப்படையற்ற செய்தி அளிப்பே இதற்கு காரணம். அந்த காலத்தில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டால், அவற்றுக்கு அடிப்படை இருந்தது. தற்போது அப்படியல்ல.

ஊடகவியலாளன் பல்வேறு நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய செய்திகளை உருவாக்கின்றான்.

எனினும் தற்போதைய நவீன சமூகத்தில் பொய்யான பத்திரிகைகளுக்கு எதிர்காலம் இல்லை. அது உறுதியாகி வருகிறது. ஊடகம் தொடர்பான நம்பிக்கை இல்லாமல் போகும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.