பிர­தமர் ரணி­லிடம் பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்தார் ஜனா­தி­பதி!!

மத்­திய வங்கி ஊழல் மற்றும் ஏனைய ஊழல்­வா­தி­க­ளுக்கு எதி ­ராக சட்ட ரீதியில் தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பாட்டில் பிரதமர் எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். மாறாக பிர­த மர் மற்றும் ஆளும் எதிர்க்கட்­சி­ யினர் என்னை பல­வீ­னப்­ப­டுத்தி ஊழல்வாதி­களை காப்­பாற்ற முயற்­சிக்­கக்­கூ­டாது என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று தெரி­வித்தார். 


ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சா ரக் கூட்டம் நேற்று கண்­டியில் இடம்­பெற்­றது, இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி ­ய­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில் 

மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மற்றும் கடந்த கால ஊழல்கள் குறித்து எனக்கு கிடைத்­துள்ள அறிக்­கைக்கு அமை­வாக அனை­வ­ருக்கும் எதி­ராக சட்­டத்தை நடை­முறை படுத்தி அவர்­க­ளுக்கு தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க எனக்கு ஒத்­து­ழைப்பு தாருங்கள். 

பிர­தமர் மற்றும் ஆளும் எதிர்க் கட்­சி­யினர் அனை­வரும் ஒரே நோக்­கத்தில் செயற்­ப­டு­வீர்கள் என்றால் இந்த பய­ணத்தில் என்னை பலப்­ப­டுத்­துங்கள். என்னை பலப்­ப­டுத்­து­வதை விடுத்து எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் என்னை பல­வீ­னப்­ப­டுத்த வேண்டாம். அவ்­வா­றான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க வேண்டாம் . 

2014 ஆம் ஆண்டு நான் அப்­போ­தைய அர­சாங்­கத்தில் இருந்து வில­கிய போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்­மீது குற்றம் சுமத்­தி­னார்கள். இன்று ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் என்­மீது குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். 

நான் எந்தக் கட்­சிக்கும் துரோகம் இழைக்­க­வில்லை. ஊழல் மோச­டிகள் அனைத்­தையும் ஒழிப்­ப­தற்கு முன்­வ­ரு­கின்றேன். ஊழலை ஆத­ரிக்கும் அவ்­வா­றான நபர்­க­ளுக்கு மட்­டுமே நான் இன்று துரோ­கி­யாக உள்ளேன். இன்று மத்­திய வங்கி அறிக்கை தொடர்­பாக மேடை­களில் கூச்சல் போடும் முன்னாள் தலை­வர்கள், அன்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­விற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்த போது பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்து வாக்­க­ளிக்­க­வில்லை. 

ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய மறுகணம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த காரணிகள் அனைத்துமே எனக்கு நன்றாக தெரியும் என்றார்.

No comments

Powered by Blogger.