நீங்க நூடுல்ஸ் பிரியரா? அப்ப மறக்காம இத படிங்க

பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் நூடுல்ஸ். இது ஆரோக்கியத்துக்கு உலைவக்கும் என்பது தெரியுமா?

பதப்படுத்தப்பட்ட உணவான நூடுல்ஸ் உடல் பருமனை உண்டாக்கும். இதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீனும் குறைவு என்பதால், இது எடையைக் குறைக்க சிறந்த உணவுப் பொருள் அல்ல.

நூடுல்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அல்லது ட்ரான்ஸ் கொழுப்புக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் எடிபிள் வெஜிடேபிள் ஆயில், சர்க்கரை, சர்க்கரை சிரப், ப்ளேவர் மற்றும் இதர ஆரோக்கியத்தைப் பாழாக்கும் ஏஜென்ட்டுகள் அடங்கியுள்ளது.

நூடுல்ஸில் எம்.எஸ்.ஜி என்னும் மோனோசோடியம் க்ளுட்டமேட் என்னும் அடிமையாக்கும் ப்ளேவர்கள் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும்.


நூடுல்ஸில் சோடியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்ஸை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அது இரத்த அழுத்த பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, இதய நோய்க்கும் வழிவகுக்கும்.

கர்ப்பிணிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளான நூடுல்ஸை உட்கொண்டால், அது கருச்சிதைவு உண்டாக்கும் வாய்ப்புள்ளது. நூடுல்ஸில் உள்ள உட்பொருட்கள், வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நூடுல்ஸில் உள்ள புரோபிலீன் கிளைக்கால், உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்தும்.


மூளையின் சீரான செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் 8 சத்துக்கள் மிகவும் அவசியம். அதில் லிசிதின், புரோட்டீன், சர்க்கரை, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நூடுல்ஸில் இந்த சத்துக்கள் மிகவும் குறைவு என்பதால், இதை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது, அது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும்.

நூடுல்ஸ் எண்ணெயால் பதப்படுத்தப்படும் போது, ஏராளமான தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதனுள்ளே உற்பத்தியாகும்.

சமையல் ஸ்டார்ச் நிறைந்த நூடுல்ஸை உயர் வெப்பநிலையில் சூடேற்றும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் அக்ரைல்அமைடை உற்பத்தி செய்யும்.

No comments

Powered by Blogger.