மட்டு- கரவெட்டி பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு!!

                                                                                  -க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவனின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25.2.2018)கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை கரவெட்டியை சேர்ந்த 21வயதுடைய மன்மதன் அருள்ராஜ் என்பவரே துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆதிகாலை வீட்டில் இருந்துசென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்திற்கு அருகில் கட்டுத்துவக்கு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.