மட்டக்களப்பில் கோர விபத்து : ஒருவர் பலி!!

மட்டக்களப்பு சந்திவெளியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஆரையம்பதியிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை எதிர்திசையிலிருந்து வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆரையம்பதி விபுலானந்தா வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ்.சஞ்சேகுமார் உயிரிழந்ததுடன் 21 வயதுடை சதீஸ்குமார் படுகாயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதசாரிகள் கடப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட மஞ்சள் நிற டிப்பர் வாகனம் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
Powered by Blogger.