மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


கல்முனையில் கன மழை தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

                                                                                                - செ.துஜியந்தன் -
கல்முனை பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கன மழையினால்ழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன். விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பல நாட்களாக கடும் வரட்சி நிலவிவந்த நிலையில் சனிக்கிழமை தொடக்கம் கல்முனையில் கடும் மழை பெய்துவருகின்றது. இதன் காரணமாக கல்முனை நகரிலுள்ள பல வீதிகளில் வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது. குறிப்பாக கல்முனை பொலிஸ் நிலைய வீதி மற்றும் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் அமைந்துள்ள பிரதான வீதி ஆகியவற்றில் வெள்ளநீர் தேங்கிநிற்கின்றது. இதனால் பயணிகள் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

வீதிகளில் பாயும் வெள்ளநீரினால் இங்குள்ள அரச அலுவலகங்கள் சிலவற்றிலும் நீர்தேங்கியுள்ளது கல்முனை பிரதான தபால் நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் பெரும் சிரமப்பட்டே செல்கின்றார்கள்.

இவைதவிர கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட் கல்முனை,பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, நற்பிட்டிமுனை ஆகிய தமிழ்க்கிராமங்களிலுள்ள தாழ்நிலப்பிரதேசங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.