இலங்கை ஒலிம்பிக் கமிட்டி தலைவராக சுரேஷ் சுப்பிரமணியம்


இலங்கை ஒலிம்பிக் கமிட்டி தலைவராக டென்னிஸ் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கான தேர்தல் ஒன்பது வருடங்களின் பின்னர் இன்று கொழும்பில் நடைபெற்றது.

கடந்த 2009ல் ஒலிம்பிக் கமிட்டித் தேர்தல் நடைபெற்ற பின்னர் இன்று வரை இடைக்கால சபை நிர்வாகம் நடைபெற்றது தவிர தேர்தல் மூலம் நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் இன்றைய நிர்வாகக்குழு தோ்தலின் போது 31 மொத்த வாக்குகளில் இருந்து 18 வாக்குகளைப் பெற்று சுரேஷ் சுப்பிரமணியம் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரொஹான் பெர்னாண்டோ 12 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக்குழு செயலாளராக மெக்ஸ்வெல் சில்வா தெரிவாகியுள்ளார்.

இதன்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகி ஒருவர் தேர்தல் கண்காணிப்பாளராகவும் தெரிவத்தாட்சி அலுவலராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.