சில ஊடகங்கள் ஊடாக விசேடமாக சமூக இணையத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்ட கூற்றுக்களினால் மோதல்நிலை

சில சில ஊடகங்கள் ஊடாக விசேடமாக சமூக இணையத்தளங்கள் ஊடாக வெளியிடப்படும் கூற்றுக்களினால் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன என்று அரசாங்க திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த  அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

இலங்கையின் மக்கள் சமூகத்தின் மத்தியில் சில குழுவை இலக்காகக் கொண்ட வன்முறையான செயற்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில் சில கருத்துக்களை சில ஊடகங்கள் ஊடாக விசேடமாக சமூக இணையத்தளங்கள் ஊடாக தெரிவிக்கப்படுகின்றமையினால் மோதல் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான கருத்துக்கள் மற்றும் பிரச்சாரங்கள் அரசியல் யாப்பு மற்றும் சட்ட பாதுகாப்பை கடைப்பிடிப்பதற்கும் தேசிய சுபீட்சத்தை மேம்படுத்துவதற்கும் இன ஐக்கியத்தை ஊக்குவித்தல் பொதுச்சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் ஏனையோரின் உரிமைகள் மற்றும் இவ்வாறோரின் சுதந்திரத்தை மதித்தல் உள்ளிட்டவை இலங்கை வாழ் மக்கள் அனைவரதும் பொறுப்பாகும் என்பது இலங்கை அரசியல் யாப்பின் 28ஆவது சரத்தின் அடிப்படைக்கொள்கை மற்றும் தர்மக்கோட்பாட்டிற்கு முரண்பட்டதாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

வன்முறையின் அடிப்படையில் செயற்படுதலை ஊக்குவித்தல் செய்யும் அல்லது குரோதம் மிக்க கருத்துக்களை முன்னெடுத்தல் , தெரிவித்தல் அல்லது இவ்வாறான கூற்றுக்களை பகிரங்கப்படுத்துதல் இலங்கையிலுள்ள சட்டத்திற்கு அமைவாகவும் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பாக சர்வதேச இணக்கப்பாட்டின் மூன்றாவது விதிகளுக்கு அமைவாக குற்றமாகும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டின் மூன்றாவது விதிகளில் தெளிவாக குறிப்பிட்ட வகையில் எவராவது அல்லது எந்தவொரு நபரையாவது மாறுபட்ட ரீதியில் கணக்கிடுதல் எதிரியாக கொண்டு செயற்படுதல் வன்முறையாக செயற்படுவதற்கு மற்றுமொருவர் அல்லது குழுவினரை தூண்டும் வகையில் யுத்தரீதியிலான வன்முறை அல்லது இனவாதம் வர்க்கவாதம் அல்லது மதவாதத்தைக் கொண்ட குரோத கூற்றுக்களை மேற்கொள்ளக்கூடாது.

இலங்கையில் குற்றவியல் சட்ட கோட்பாட்டின் 100 ஆவது பிரிவில் எவராவது குற்ற தவறுக்கு ஒத்தாசை வழங்குதல் குற்றதவறு என்ற ரீதியில் அடையாளங்காணப்படுவதுடன் ஏதேனும் குற்ற செயல்களை மேற்கொள்வதற்கு வேறொருவரை ஊக்குவித்தல் குற்றச்செயலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் எவரேனும் ஓரு நபருக்கு பாதிப்பை ஏற்படுத்தல் அல்லது ஆயுதத்தை பயன்படுத்தி ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளுக்கு எவராவது ஊக்குவிப்பது முற்றா குற்றமாகும்.

கருத்துக்களை தெரிவித்தல் மற்றும் தமது கருத்துக்களை கூற்றாக சமர்ப்பிப்பதற்காக இலங்கையர்களுக்குள்ள சுதந்திரம் அரசியல் யாப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.( இவ்வாறானவை உரிய சட்ட வரையறை சிலவற்றிற்கு மாத்திரம் உரிமைக்கு உட்பட்டதாகும்) .கருத்துக்களை தெரிவித்தலுக்கான சுதந்திரம் போன்ற உரிமைகளின் முழுமையான பொறுப்பை பயன்படுத்துகின்றமை அந்த உரிமையை அனுபவிக்க உள்ள உரித்தாகும்.

கருத்துக்களை பரிமாறும் சுதந்திரத்திற்கான தமது உரிமையை அனுபவிக்கும் பொழுது சமூகத்தின் ஏனைய நபர்களின் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு பாதிப்பேற்படாத வகையில் அந்த உரிமையை அனுபவிப்பது அதில் உள்ள உரிமையாகும். மறுபுறத்தில் கருத்துதெரிவிக்கும் உரிமை என்பது வன்முறைகளை பயன்படுத்தல் அல்லது குரோதம் மிக்க கூற்றுக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இல்லாது அதன் உரிமையை அனுபவிப்பதற்கான உரிமையாகும் என்பதினால் இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு எதிரான வகையில் வன்முறை ரீதியில் செயல்படுதல் அல்லது குரோதமிக்க கூற்றுக்களை ஊக்குவித்தல் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடாது அனைத்து இலங்கையர்களும் விசேடமாக ஊடக நிறுவனங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியதுடன் , மேலே குறிப்பிட்ட வகையில் வன்முறையை ஊக்குவித்தல் குரோதத்துடனான கூற்றுக்களை ஊக்குவித்தல் மற்றும் பகிரங்கப்படுத்தாது இருப்பதற்கு அனைவரும் செயற்படவேண்டும்.

சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
Powered by Blogger.