கண்டி வன்முறைகளுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ரத்து?

கண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட உள்ளது.
கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவங்களுடன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் தற்பொழுது கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கட்சி உறுப்புரிமையையும் ரத்து செய்வதற்கான பிரேரணை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தி செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓர் தேசிய கட்சியாகும், இவ்வாறான ஓர் கட்சி மீது இனவாத முத்திரை குத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின் போது இந்த இருவரும் குற்றம் இழைத்தமை கண்டறியப்பட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.