மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


பேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.!

சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்றைய தினமும் அமுலில் இருக்கும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம், பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை ஆகிய சமூக வலைதளங்கள் இதில் உள்ளடங்குவதுடன் இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
எவ்வாறாயினும், மாற்று வழிகளை பயன்படுத்தி பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக இனவாத கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகின்றவர்கள் மற்றும் பரிமாற்றுகின்றவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிக தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.