மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


இலங்கையில் அதிரடியாக நீக்கப்பட்ட சில பேஸ்புக் கணக்குகள்

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு சமூகவலைத்தளங்களில் பரவி வந்த இனவாத கருத்துக்களும் முக்கிய காரணம் என்பது அனைவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த இனவாத கருத்துக்கள் பேஸ்புக் மூலமாகவே அதிகம் பரவிவந்தன. இந்த நிலையில் 72 மணித்தியாலங்களுக்கு சமூக வலைத்தளங்களை முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கை அமுல்படுத்தப்பட்டது.

எனினும் 72 மணித்தியாலங்களை கடந்தும் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூகவலைத்தளங்கள் இன்றுவரை முடக்கப்பட்டுள்ளன.

அவசரகாலச் சட்டத்தின் கீழேயே, சமூக வலைத்தளங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில் இது தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இனவாதத்தை பரப்பியதாக கூறப்படும் Mahson Balakaya மற்றும் Lella Hutan போன்ற பல பேஸ்புக் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் போலி செய்திகள் மற்றும் இனவாத கருத்துக்களை பரப்பிய 150 பேஸ்புக் கணக்குகள் வட்ஸ்அப், வைபர் கணக்குகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

இதன்போது வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.