மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


இலங்கை முஸ்லிம்கள் அச்சத்தில்..!

நாட்டில் ஓரிருவர் செய்த குற்றச் செயல் இன்று சிங்கள முஸ்லிம் மக்களிடையே இனக் கலவரமாக மாறி அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

கழுகு போல் காத்திருந்த இனவாதிகளுக்கு பெரிய மாமிசமே கிடைதாற் போன்று, கண்டி திகன பகுதியில் முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலுக்கு இலக்காகி சிங்கள இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றது.


இதனை பகடைக்காயாகப் பயன்படுத்தி முஸ்ஸ்லிம் மக்களை தாக்கி அவர்களின் சொத்துக்களை இல்லாதொழித்து வருகின்றனர் இந்த இனவாதிகள்.

என்னதான் முழத்துக்கு முழம் பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் இனவாதிகளின் அடாவடித்தனம் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

பாதுகாப்பு என்ற போர்வையில் இருக்கும் படையினர் நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை பார்வையிடும் பார்வையாளர்களாக மாத்திரமே உள்ளனர்.

தனது வயிற்றை கட்டுப்படுத்தி வியர்வை சிந்தி சிறிது சிறிதாக சேர்த்த அனைத்து உடைமைகளையும் இழந்து இன்று வீதியில் நிற்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு முஸ்லிம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிபர்கள் என அனைவரும் துன்பத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த கலவரத்துக்கு பின்னணியில் பல காரணிகள் கூறப்பட்ட போதும் அந்த அனைத்து காரணிகள் பின்னணியிலும் உள்ளவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களே தவிர சிறுபான்மையினர் அல்ல.

ஒரு இனம் முன்னேறி வருமாயின் அது அவர்களின் உழைப்பு ஒன்றே காரணம். அதை பார்த்து பொறாமைப்படும் இனமே இவ்வாறு மூர்க்கத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை.

குறிப்பாக ஒவ்வாரு மதமும் சமாதானத்தையும் சாந்தியையும் ஒழுக்கத்தையுமே போதிக்கின்றது. ஆனால் அந்த நீதியை போதிக்கும் மதத் தலைவர்களே களத்தில் நின்று இனவாதத்தை கக்குகின்றமை கவலையை ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களின் மனதிலும் ஏதோ ஒரு இனந்தெரியாத கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலை இன்னும் இரு நாட்களுக்கு தொடருமாயின் இலங்கை இனகலவர பூமியாக மாறி இரத்தாறு ஓடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

எனவே ஒவ்வொருவரும் அமைதியாக இருந்து பொறுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே இந்த கலவரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது நிதர்சனம்.

No comments

Powered by Blogger.