மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சரஹா செயலி நீக்கப்பட்டதற்கான காரணம் இதுதான்


Image result for sahara app

சரஹா செயலிக்கு எதிராக குவிந்த புகார்களின் அடிப்படையில், Google Play Store-யில் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டு இருக்கிறது.

சவுதி அரேபியாவில் உருவாக்கப்பட்ட Sarahah எனும் செயலிக்கு உலகம் முழுவதும் பயனாளிகள் இருந்தார்கள்.

இந்த செயலி மூலமாக ரகசியமாக குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மருத்துவம் சம்பந்தப்பட்ட ரகசிய கேள்விகளுக்கு, சில மருத்துவர்கள் இந்த செயலி மூலம் பதிலளித்து வந்துள்ளனர்.

இது போன்ற பல பயன்களை இந்த செயலி மூலம் பெற முடிந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பள்ளி மாணவி ஒருவருக்கு, இந்த செயலியின் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

குறித்த நபர் யார் என்று தெரியாத அம்மாணவி, தற்கொலை முயற்சி வரை சென்றிருந்தார். அதே வாரம் அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவரும், மோசமான முறையில் உடல் ரீதியாக ஏளனம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று பல சீண்டல்களான குறுஞ்செய்திகள், இந்த செயலி மூலம் அனுப்பப்பட்டு வந்ததால், இந்த செயலி குறித்து புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, இதனைத் தடுக்க புதிய Update செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், அவை யாவும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது. இந்நிலையில், Google Play Store-யில் இருந்து Sarahah செயலி மொத்தமாக நீக்கப்பட்டு உள்ளது. இதை ஒத்து உருவாக்கப்பட்டிருந்த போலியான செயலிகளும் நீக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.