மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


கடனை அடைக்க தயார்! விஜய் மல்லையா திடீர் அறிவிப்பு!


இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி கம்பி நீட்டி விட்டு, இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா தனது கடனை அடைக்க தயார் என அறிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.

இந்தியா விடுத்த கோரிக்கையின் பெயரில் விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பாலான சொத்துக்களை இங்கிலாந்து நீதிமன்றம் முடக்கியது.

ரூ.12,400 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்காக கடன் பாக்கி தொகையை மல்லையா வங்கிகளுக்கு செலுத்தவில்லை என குற்றச்சாட்டு கர்நாடக நீதிமன்றத்தில் எழுந்துள்ளது.

இந்நிலையில் மல்லையா சார்பில் தன் கடன் தொகையை திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் விஜய் மல்லையா ஆரஞ்சு இந்தியா கோல்டிங்ஸ், யுனைடெட் மது நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். மேலும், இங்கிலாந்து விர்ஜின் தீவுகளிலும் அவருக்கு சொந்தமாக இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.