மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


காத்தான்குடியில் பிரபல வர்த்தகர் மாயம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி நகர், மீன்பிடி இலாகா வீதி, மனேஜர் ஒழுங்கையைச் சேர்ந்த ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் என்ற 35 வயதுடைய பாதணித் தொழிற்சாலைகளின் உரிமையாளரே சனிக்கிழமை இரவு 7.30 மணியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி பாத்திமா நஸ்லியா இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் வழமை போன்று சனிக்கிழமை இரவு தனது மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறி அருகில் இருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி விட்டு வெளியேறியவரே இரவு 7.30 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

அவர் கடைசியாக அந்த உணவகத்தில் இருந்து வெளியேறியபோது பதிவான சிசிரிவி காணொளியை வைத்து பொலிஸார் விசாரணைகளில் இறங்கியுள்ளனர்.

குறித்த வர்த்தகர் காணாமல் போன சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.