களுவாஞ்சிக்குடியில் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா!!

                                                                                          - செ.துஜியந்தன் -
மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் தென்றல் காலாண்டு சஞ்சிகையின் ஏற்பாட்டில் கலாபூசணம் மு.தம்பிப்பிள்ளை எழுதிய வாழப்பிறந்தவள், புதுமைப்பெண், சுதந்திரப்பறவைகள் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா மட்டக்களப்பு களுவாஞ்சிக்கு இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. 

தென்றல் சஞ்சிகை ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.சிவநாதன், பிரதிக்கல்விப்பணிப்பாளர் செல்வி
கி.ஜெயந்திமாலா, செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், தேசமானிய எம்.எம்.மவ்றூப் கரீம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு வாழப்பிறந்தவள் சிறுகதை பற்றிய நயவுரையினை கலாபூசணம் அரசரெட்ணம் நிகழ்த்தினார். புதுமைப்பெண், சுதந்திரப்பறவைகள் ஆகிய இரு நாவல்கள் பற்றிய நயவுரையினை கவிஞர் ஆழிவேந்தன் ரமேஸ்குமார் நிகழ்த்தினார். இங்கு நூலாசிரியர் மு.தம்பிப்பிள்ளை அதிதிகளினால் பொன்னாடைபோர்த்தி நினைவுச்சின்னம்மற்றும் வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Powered by Blogger.