மின்னுயர்த்தி செயலிழந்ததில் ஒருவர் பலி; வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மின்னுயர்த்தி செயலிழந்ததால் ஒருவர் உயிரிழந்தச் சம்பவத்தையடுத்து, கம்பஹா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், இன்று வெள்ளிக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வைத்தியசாலையில், அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாகத தெரிவித்த வைத்தியசாலையின் வைத்தியர் டொக்டர் ருக்மால் ரூபரத்ன ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படுவது இல்லை என்றும் தெரிவித்தார்.

கம்பஹா வைத்தியசாலையின் மின்னுயர்த்தியொன்று செயலிழந்ததால், மின்னுயர்த்தியிலிருந்து வெளியே வரமுயற்சி 33 வயது நபரொருவர் 5ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்தே, கம்பஹா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகளுடன் வைத்தியசாலையின் மேல் மாடிகளுக்குப் பயணித்த மின்னுயர்த்தி, இடையில் செயலிழந்து நின்றதாகத் தெரிவித்த பொலிஸார், பின்னர் மின்னுயர்த்தியின் கதவுகள் தானாகத் திறந்துகொண்டதெனவும், அதிலிருந்த பயணிகளை மிகவும் பிரயத்தனத்தின் மத்தியில் வெளியில் எடுத்ததாகவும் தெரிவித்தனர்.

எனினும், இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர், மின்னுயர்த்தியிலிருந்து வெளியே பாய்ந்தபோது, மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னுயர்த்தி செயலிழந்து நிற்பதுத் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்த போதிலும் அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்பட்டனர் என்று, வைத்தியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Powered by Blogger.