வட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் இன்று முதல் நிறுத்தம்!!

அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். 

"ஏப்ரல் 21ஆம் திகதியில் இருந்து அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவுவதையும் நிறுத்துவிடுவதாக" சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

கொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது. 

தென் கொரியாவின் மூன் ஜே-இன்னை அடுத்த வாரம் சந்திக்க உள்ளார் கிம். அது மட்டுமில்லாமல் வரும் ஜூன் மாதம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும் அவர் சந்திக்க உள்ளார். 

"வட கொரியாவிற்கும், ஒட்டு மொத்த உலகிற்கும் இது நற்செய்தி - பெரும் முன்னேற்றம்" என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஜனாதிபதி டிரம்ப். 

இதேவேளை, அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்தினால், வட கொரியாவிற்கு ஒளிமையமான எதிர்காலம் இருக்கும் என டிரம்ப் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.