புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலய லட்சார்சினையும் சங்காபிசேகமும்!!

                                                                                          - செ.துஜியந்தன் -
மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தின் வருசாபிசேக தின சங்காபிசேக நிகழ்வு புதன்கிழமை இடம் பெறவுள்ளது.

இதனையிட்டு பூர்வாங்க கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரா.கு.கோபாலசிங்கம் குருக்கள் தலைமையில் லட்சார்ச்சினை நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள் சிவஸ்ரீ கோ.கிரதரக்குருக்கள், சிவயோகச் செல்வன் சாம்பசிவாச்சாரியார் குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் புதன்கிழமை காலையில் பாற்குட பவனியும், சங்காபிசே நிகழ்வும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.