காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மஹா பஸ் வேனுடன் மோதி விபத்து!! பலர் உயிரிழப்பு!!

                                                                                          - ரொஸான் -
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மஹா பஸ் கிரானில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

வேனில் பயணம் செய்தவர்களில் மூவர் மரணித்துள்ளதுடன் பஸ்ஸில் பயணம் செய்த சிலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை பொதுமக்கள் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக வைத்தியமும் செய்யப்பட்டு வருகிறது! பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக அறிய முடிகிறது.


பிந்திய செய்தி
நேற்றிரவு மட்டக்களப்பு கிரான் பகுதியில் இடம்பெற்ற வேனும் பஸ்வண்டியும் நேரடியாகமோதியதில் பலியான சாரதி கல்லடி நொச்சிமுனையைச்சேர்ந்த  பாலச்சந்திரன் வினோஜன் என அறிய முடிகிறது


No comments

Powered by Blogger.