இனி சினிமாவே வேண்டாம்: அதிரடி முடிவு எடுத்த சிம்பு, தனுஷ் பட நடிகை!!

இனி படங்களில் நடிக்கப்போவதில்லை எனவும், சினிமாவே வேண்டாம் எனவும் முடிவெடுத்துவிட்டதாகவும் ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களின் நாயகி ரிச்சா கங்கோபாத்யா அதிரடி முடிவெடுத்துள்ளார்.

மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யா. அதன் பிறகு ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழ் பக்கம் தலைக்காட்டாமல் தெலுங்கிலேயே நடித்தார். கடைசியாக அவர் 2013ம் ஆண்டு பாய் படத்தில் நடித்தார்.

அதன்பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம். இனி எப்போது மீண்டும் படத்தில் நடிப்பார் என்ற கேள்வியை அவரிடம் பலரும் ட்விட்டர் மூலம் கேட்டுக் கொண்டு இருந்தனர்.


அந்த கேள்விகளுக்கு ரிச்சா தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், "என்னுடைய அடுத்த படம் எப்போது என்று தொடர்ந்து என்னிடம் பலர் கேட்டு வருகின்றனர். நான் 90 வயதை எட்டும் போதும் என்னிடம் இந்த கேள்வியை கேட்பார்கள். இனி சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கும் முற்றிலுமாக இல்லை" என்று பதிவிட்டு இருந்தார்.

ரிச்சாவின் இந்த முடிவு குறித்து பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதனால் தான் சில நாட்களுக்கு ட்விட்டரில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.