சொகுசு பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து; 03 பெண்கள் பலி!!

மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாத்தண்டிய, வலஹபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று ஒல்லாந்து கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 19 பேர் காயங்களுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்தி 

இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக அதிரிகரித்துள்ளதாக வைத்திய சாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.